ஆந்திராவில் அதிர்ச்சி: கொதிக்கும் சாம்பாரில் விழுந்த பெண் உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் அதிர்ச்சி: கொதிக்கும் சாம்பாரில் விழுந்த பெண் உயிரிழப்பு
Published on

அமராவதி,

ஆந்திராவில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இந்து மதப்பண்டிகை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கே.எல்.ராவ் நகர் பகுதியில் அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாம்பாரில் விழுந்த பெண் உயிரிழப்பு

உணவு சமைக்கும் பணியில் அப்பகுதியை சேர்ந்த பலர் ஈடுபட்டனர். அதில் மத்தி சுஜாதா (வயது 46) என்ற பெண்ணும் சமையல் பணியில் ஈடுபட்டார். அதன்படி, சாம்பார் குழம்பு வைத்தப்பின் அதை அடுப்பில் இருந்து சாம்பார் அண்டாவை கீழே இறக்கி வைத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறிய சுஜாதா கொதிக்கும் சாம்பார் அண்டாவுக்குள் விழுந்தார். இதில் அவரின் முகம் உள்பட உடல் பாகங்களில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சுஜாதா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com