குஜராத்தில் அதிர்ச்சி - கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குஜராத்தில் அதிர்ச்சி - கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி
Published on

போட்டட்,

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்தது செல்லப்பட்டனர் .அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் இன்னும் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது .துணை பேலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com