கேரளாவில் அதிர்ச்சி: ஓடும் ரெயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர்

டிக்கெட் பரிசோதகர் சிஜு சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளாவில் அதிர்ச்சி: ஓடும் ரெயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஓடும் ரெயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணிக்கு பாலியல் தொல்லை

கேரள மாநிலம் திரிச்சூரில் இருந்து வல்லத்தோல் நகருக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயில் பயணித்த பெண் பயணிக்கு அதே ரெயிலில் பயணித்த டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி இது குறித்து தனது கணவருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

டிக்கெட் பரிசோதகர் கைது

ரெயில் ஷோரனூர் ரெயில் நிலையத்திற்கு வந்ததையடுத்து விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்புப்படையினர் டிக்கெட் பரிசோதகரை கைது செய்தனர். இதையடுத்து, டிக்கெட் பரிசோதகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொல்லம் மாவட்டம் கடக்கல் பகுதியை சேர்ந்த சிஜு (வயது 47) என்பது தெரியவந்தது. மேலும், அவர் திருவனந்தபுரம் ரெயில்வே பிரிவில் டிக்கெட் பரிசோதகராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் சிஜு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com