தெலுங்கானாவில் அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்காக விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை

மகபூப்நகர் நகரில் வாங்குபவரின் கைவசம் இருந்து குழந்தையை போலீசார் குழு மீட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.
தெலுங்கானாவில் 1 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்டது.
பச்சிளம் குழந்தை
Published on

ஹைதராபாத்,

தெலுங்கானாவில் ஒரு லட்சம் ரூபாய்க்காக பச்சிளம் குழந்தை பெற்றோரால் விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பச்சிளம் குழந்தை விற்பனை

தெலுங்கானா மாநிலம், தெலுங்குகுடம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியருக்கு ஏற்கனவே 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்த நிலையில் மகபூப்நகர் மாவட்டத்தில் அந்த பச்சிளம் குழந்தை, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு இடைத்தரகர் மூலம் ரூ. 1 லட்சத்திற்கு பெற்றோரால் விற்கப்பட்டது.

குழந்தை மீட்பு

இதையடுத்து குழந்தை விற்பனை செய்யப்பட்ட தகவல் ரகசியமாக குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே அதிகாரிகள் இது குறித்து மகபூப்நகர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பச்சிளம் குழந்தையை வாங்கிய நபர் மற்றும் ஒரு இடைத்தரகர் மீது கடந்த 17-ம் தேதி அன்று வழக்கு பதிவு செய்யதனர்.

மேலும் இன்று விசாரணையின் போது, ​​மகபூப்நகர் நகரில் வாங்குபவரின் கைவசம் இருந்து குழந்தையை ஒரு போலீசார் குழு மீட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை அவர்கள் 'விற்றதற்கான' சரியான காரணங்கள் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com