அதிர்ச்சி சம்பவம்: விடுதி அறையில் கல்லூரி மாணவி மர்ம மரணம்

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாகல்கோட்டை,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை(மாவட்டம்) டவுனில் உள்ள ஒரு தனியார் பி.யூ. கல்லூரியில் படித்து வந்தவர் சீமா ரத்தோட்(வயது 17). இவர் அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் சீமா தனது அறையில் தூக்கில் தொங்கினார். அதைப்பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விடுதி கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர், சீமாவை மீட்டு சிகிச்சைக்காக பல்லாரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டனரா? என்று தெரியவில்லை. அது மர்மமாக உள்ளது. இதுகுறித்து சீமாவின் பெற்றோர் நவநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






