அதிர்ச்சி சம்பவம்: தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட எஸ்.எஸ்.எல்.சி. மாணவி


அதிர்ச்சி சம்பவம்: தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட எஸ்.எஸ்.எல்.சி. மாணவி
x

தகவல் அறிந்தபோலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

நெலமங்களா,

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராமு. இவரது மனைவி ஷோபா. இந்த தம்பதியின் 16 வயது மகள், அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினாள். நேற்று காலையில் வீட்டின் படுக்கை அறையில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினாள். இதை பார்த்து ராமு, ஷோபா ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள்.

தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பெற்றோர் தூங்கிய பின்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் மாணவி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story