மியான்மரில் போராட்டம் நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல உயரதிகாரி உத்தரவை ஏற்க மனமின்றி இந்தியாவுக்கு தப்பி வந்த போலீஸ் அதிகாரி

மியான்மரில், ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல உயரதிகாரி உத்தரவிட்டதை ஏற்க மனமின்றி இரவோடு இரவாக போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார்.
படம்: AP Photo
படம்: AP Photo
Published on

புதுடெல்லி

ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியைக் கலைத்து தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் அந்நாடு முழுவதும் போர்க் களமாகக் காட்சி அளிக்கிறது.

போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை மியான்மர் ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைப்பதும்,துப்பாக்கியால் சுடுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவில்லை.

மியான்மரில், ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல உயரதிகாரி உத்தரவிட்டதை ஏற்க மனமின்றி இரவோடு இரவாக போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார்.

மியான்மரின் காம்பாட்நகரில், போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லுமாறு கடந்த 27 ஆம் தேதி அவரது மேலதிகாரி உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

பலமுறை உத்தரவிட்டும் அதை ஏற்க மனமின்றி வேலையை ராஜினாமா செய்த அவர், கடந்த 1 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன், 3 நாட்கள், ராணுவத்தினரின் கண்களில் படாமல் பயணம் செய்து மிசோரம் மாநிலத்திற்குள் ஊடுருவி வந்திருக்கிறார்.

அவர் குறித்த தகவல்களை ராய்ட்டர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. தாம் மட்டுமின்றி தமது சகாக்கள் 6 பேரும் பொதுமக்களை சுட்டுக்கொல்லும் உத்தரவுக்கு அடிபணியவில்லை என தா பெங் கூறியுள்ளார்.

ஒப்பன்னை கலைஞரான ஹிதேஷா சந்திரனி, மார்ச் 9 ம் தேதி ஜொமாடோ டெலிவரி நிர்வாகியால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், மூக்கில் இரத்தக்களரியுடன் காணப்பட்ட ஹிடேஷா, தனது ஆர்டரை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அவரை எதிர்கொண்ட பின்னர் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் தன்னைத் தாக்கியதாகக் கூறுகிறார். டெலிவரி எக்ஸிகியூட்டிவ் தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மேலும் குற்றம் சாட்டுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com