காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 2 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திட துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 2 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்குள்ள ஷோக்பாபா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தனர் .

இந்த சூழலில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த மோதலின் இறுதியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த இருவரின் விவரங்களை கண்டறிவதற்கான விசாரணை நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com