சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்... 2-வது மனைவியை சுட்டுக்கொன்ற நபர்

துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அடித்து கொலை
Published on

ஐதராபாத்,

கணவன் - மனைவி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மல்காஜ்கிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 48 வயது நிரம்பிய ஒருவர் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். அவருக்கு தனது மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மனைவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

சுட்டுக் கொலை

அதேபோல இன்று காலை 4.30 மணியளவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது அந்த நபர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com