பெங்களூரு: நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 2 பேர் காயம்

ஹந்தாராமின் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை வாங்குவதுபோல் வாக்குவாதம் செய்தனர்.
பெங்களூரு: நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 2 பேர் காயம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொடிகேஹல்லி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். ஹந்தாராமின் நகைக்கடைக்குள் இன்று காலை 11 மணி அளவில் புகுந்த மர்மநபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடையின் உரிமையாளரும், ஊழியரும் படுகாயம் அடைந்துள்ளனர். நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com