ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு? - ரிசர்வ் வங்கி விளக்கம்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை பயன்படுத்த பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு? - ரிசர்வ் வங்கி விளக்கம்
Published on: 

புதுடெல்லி,

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற தீபாவளி பண்டிகையின்போது ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகள் போதுமான அளவுக்கு கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதில், "பண பரிவர்த்தனைகளை கணிசமாக குறைப்பதற்காக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை பயன்படுத்த பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனவே பண்டிகை காலங்களின்போது பொருட்கள் வாங்குவதற்காக பணம் கையிருப்பு வைப்பது தொடர்பாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல் போலியானது. இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. பொய் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கான தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.

X