நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரபேல் போர் விமானங்கள் !

பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.
நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரபேல் போர் விமானங்கள் !
Published on

பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.

பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளன. இந்த பயணத்தில் நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் மட்டும் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

ரபேல் போர் விமானங்களின் பயணத்தின் போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வருகின்றன. பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை இந்திய விமானப்படை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. பிரான்சு விமானப்படைக்கு சொந்தமான டேங்கர் விமானம் மூலமாக எரிபொருள் நிரப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com