அம்பேத்கரின் சிந்தனை அடிப்படையில் புதிய நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

அம்பேத்கரின் சிந்தனை அடிப்படையில் புதிய நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது நியாயமற்றது என்று கூறியிருந்தார். ஆனால் இந்த திறப்புவிழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தபோதும், பிற பணிகளை காரணமாக கூறி அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டிருப்பதற்கு நான் மத்திய அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அம்பேத்கரின் மனிதாபிமான சிந்தனைகள் அடிப்படையிலும், அவர் உருவாக்கிய புனிதமான அரசமைப்பு சட்டத்தின் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும் நாடு, நாட்டு மக்கள் நலன் கருதி புதிய நாடாளுமன்றம் செயல்பட வேண்டும். அதுவே பொருத்தமானதாகவும் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com