

உடுப்பி,
கர்நாடக மாநிலம் உடுப்பியில், யோகா குரு பாபா ராம்தேவ், இலவச யோகா முகாம் நடத்தி வருகிறார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பசுவதைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், வேறுவகையான இறைச்சியை சாப்பிடலாம்.
அதுபோல், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி பிரசாரம் தொடங்க வேண்டும்.
அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரே பொது சிவில் சட்டம் கொண்டுவருவதன் அவசியத்தை உணர்த்தி உள்ளார். எனவே, நாடு ஒன்றுபட பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.