இந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார்: மோடி மீது, ராகுல் காந்தி கடும் தாக்கு

இந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார் என மோடி மீது, ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை குப்புற தள்ளிவிட்டார்: மோடி மீது, ராகுல் காந்தி கடும் தாக்கு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடியும், பொருளாதார ஆலோசகர்கள் அடங்கிய அவரது கனவு அணியும் பொருளாதாரத்தை குப்புற தள்ளி விட்டனர். முன்பு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதம், பணவீக்கம் 3.5 சதவீதம் என்று இருந்தது. இப்போது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவீதம், பணவீக்கம் 7.5 சதவீதம் என்று ஆகி உள்ளது.

பிரதமர் மோடியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் பொருளாதார விவகாரத்தில், அடுத்து என்ன செய்வது என்று எந்த யோசனையும் இல்லாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com