இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் சித்தராமையா, சதீஷ் ஜார்கிகோளி

இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் சித்தராமையா, சதீஷ் ஜார்கிகோளி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் சித்தராமையா, சதீஷ் ஜார்கிகோளி
Published on

பெங்களூரு:-

பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகா யமகனமரடி தொகுதி எம்.எல்.ஏ. சதீஷ் ஜார்கிகோளி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் புத்தர், அம்பேத்கர், பசவண்ணரில் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (20-ந்தேதி) கடைசி நாளாகும். இன்று அமாவாசை என்பதால் பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் மூடநம்பிக்கைக்கு எதிரானவரான சதீஷ் ஜார்கிகோளி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். அதுவும் ராகுகாலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

அதுபோல் மூடநம்பிக்கைக்கு எதிராக தீவிரமாக உள்ள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் வருணா சட்டசபை தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com