

பெங்களூரு,
கர்நாடக பாரதீய ஜனதா டிஜிட்டல் கம்யூனிகேசன்ஸ் குழு முகநூல் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிக எண்ணிக்கையிலான அரசியல் கொலைகள் நடைபெறுவதனை பொதுமக்கள் கர்நாடக வரலாற்றில் இதுவரை கண்டதில்லை. சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, அரசியல் படுகொலைகளை செய்வதில் மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாதிரிகளை பின்பற்றுகிறது என தெரிவித்துள்ளது.
மூத்த காவல் துறை அதிகாரி ஒருவரது மரணத்துடன் தொடர்புடைய வழக்கில் முதல் குற்றவாளியாக கர்நாடக மந்திரி (கே.ஜே. ஜார்ஜ்) ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது மாநில வரலாற்றில் இதுவரை இல்லை என்றும் அந்த குழு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபரில், டி.எஸ்.பி. எம்.கே. கணபதி தற்கொலை வழக்கில் ஜார்ஜ் பெயரை குற்றவாளியாக எப்.ஐ.ஆர். பதிவில் சி.பி.ஐ. சேர்த்தது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 4ந்தேதி நடந்த பொது பேரணியில், கர்நாடகாவில் கொலை செய்வது எளிது என சரியாக சுட்டி காட்டினார் என்றும் குழு தெரிவித்துள்ளது.