

பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
நான் காங்கிரசை விட்டு விலகுவதற்காக 90 வேட்டிகள் வாங்கியுள்ளதாக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார். எல்லா இடங்களிலும் மரியாதை இழந்து வரும் பா.ஜனதா தலைவர்களுக்கு வழங்கலாம் என்று வேட்டிகளை வாங்கியுள்ளேன். தேவைப்பட்டால் நளின்குமார் கட்டீலுக்கும் சில வேட்டிகளை வழங்க தயாராக உள்ளேன். இன்னும் 19 சி.டி.கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் உங்களின் நாக்கு உள்பட அனைத்தும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நளின்குமார் கட்டீல், சித்தராமையா காங்கிரசை விட்டு விலகுவதற்காகவே 90 வேட்டிகளை வாங்கியுள்ளதாக கிண்டலாக கருத்து தெரிவித்து இருந்தார். அந்த கருத்துக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.