

பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி முதல்மந்திரி சித்தராமையா மதக்கலவரம் தொடர்பாக சிறுபான்மையினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக குறிப்பிட்டதை விமர்சனம் செய்து உள்ள பா.ஜனதா இஸ்லாமியர்களை சாந்தப்படுத்தும் முயற்சி என சாடிஉள்ளது.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, எங்கள் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியிடுவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் தானே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்?. ஜனநாயகத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு இடையூறு செய்யும் அளவுக்கு நாங்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்ள மாட்டோம். மதக்கலவரம் தொடர்பாக சிறுபான்மையினர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள், கன்னட சங்கத்தினர், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவது குறித்து நாங்கள் பரிசீலனை வருகிறோம்.
போலீஸ் துறையின் கருத்தை கேட்டு அறிந்த பிறகு முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டார். இதுதொடர்பாக அரசின் சுற்றறிகை மாவட்ட போலீஸ் தமையகங்களுக்கு அனுப்பட்டு உள்ளது, ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது.
சித்தாரமையா இவ்வாறு கூறியதற்கு பா.ஜனதா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சித்தராமையா அரசு இஸ்லாமியர்களை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டிஉள்ளது.
வாக்குக்காக சித்தராமையா அரசு இஸ்லாமியர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களை சாந்தப்படுத்தும் முயற்சி இல்லையென்றால் வேறு என்ன? என பாரதீய ஜனதா கேள்வியை எழுப்பி உள்ளது. மதகலவரங்களில் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் உதவி செய்கிறது எனவும் பாரதீய ஜனதா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழக்க சித்தராமையா அரசு திட்டம் தீட்டிஉள்ளது. வாக்குக்காக இதனை செய்கிறது. இதனை யாரும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் இதற்கு எதிராக போராடுவோம், என பா.ஜனதா எம்.பி. சோபா கரண்லஜே பேசிஉள்ளார்.
காங்கிரஸ் மதவாத அரசியலில் இரட்டை வேடம் போடுகிறது எனவும் பா.ஜனதா தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது.
பா.ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய சித்தராமையா, நாங்கள் அப்பாவி இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அப்பாவி மக்கள் அனைவருக்கும் எதிரான வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுகிறோம். விவசாயிகள், கன்னட அமைப்பாளர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறுகிறோம். பாரதீய ஜனதா மற்றொரு தோல்விக்கு தயாராகிவிட்டது. பொய் மேல் பொய்யை பரப்புகிறது. சுற்றறிக்கையில் இஸ்லாமியர்கள் மட்டும் என்று குறிப்பிடவே இல்லை. இது பாரதீய ஜனதாவின் கற்பனையாகும்,என கூறிஉள்ளார்.