சித்தராமையா நெருக்கடியான காலகட்டத்தில் எனக்கு துணை நின்றவர்: டி.கே. சிவக்குமார்

சித்தராமையாவின் நெருக்கடியான காலகட்டம் ஒவ்வொன்றிலும் துணை நின்றவன் நான் என டி.கே. சிவக்குமார் கூறினார்.
சித்தராமையா நெருக்கடியான காலகட்டத்தில் எனக்கு துணை நின்றவர்:  டி.கே. சிவக்குமார்
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது. ஆனால், கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

எனினும், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே உள்ளது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு நவம்பரில் இந்த ஆட்சியின் முதல் இரண்டரை வருட காலம் நிறைவடைந்தது. இதனால், முதல்-மந்திரி மாற்றம் செய்யப்படுவார் என யூகங்கள் கிளம்பின. எனினும், கர்நாடகாவில் தற்போது, முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர்.

சித்தராமையா நெருக்கடியான காலகட்டத்தில் எனக்கு துணை நின்றவர்:  டி.கே. சிவக்குமார்
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்த சூழலில், இந்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டி.கே. சிவக்குமார் கூறும்போது, நாங்கள் இருவரும் ஒன்றாக கைகோர்த்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம் என்றார். காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் உள்ள சித்தராமையா உள்ளிட்ட சக எம்.எல்.ஏ.க்களால் எனக்கு பலம் வருகிறது.

சித்தராமையாவின் நெருக்கடியான காலகட்டம் ஒவ்வொன்றிலும் துணை நின்றவன் நான். தொடர்ந்து அவருக்கு நான் உறுதுணையாக நிற்பேன் என்றார். இதேபோன்று, எனக்கு நெருக்கடியான காலகட்டத்தில் சித்தராமையா துணை நின்றார் என்று டி.கே. சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com