டி.கே.சிவக்குமார் ஏற்பாட்டிலேயே சித்தராமையாவின் ரகசிய வீடியோ எடுக்கப்பட்டது-மத்திய மந்திரி குமாரசாமி பேட்டி

டி.கே.சிவக்குமாரால் சித்தராமையாவின் நற்பெயர் சீர்கெட்டுவிட்டது. இதுகுறித்து மந்திரி யதீந்திரா சித்தராமையா கூறியது உண்மை என்று குமாரசாமி கூறியுள்ளார்.
குமாரசாமி
Published on: 

முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் ஏற்பாட்டில் சித்தராமையாவின் ரகசிய வீடியோ கடந்த 2023-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.மத்திய கனரக தொழில்கள் துறை மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்தராமையா ஆதரவாளர்

ரகசிய வீடியோ விவகாரத்தை நான் விடமாட்டேன். கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், நைஸ், பிடதி உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட எந்த ரகசிய வீடியோ விவகாரத்திலும் நீதிக்காக போராடுவேன். காங்கிரஸ் பெண் நிர்வாகி மூலம் சித்தராமையாவின் ரகசிய வீடியோவை எடுத்துள்ளனர். இதற்கு ஏற்பாடு செய்தவர் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏதோ ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு, கடந்த 2023-ம் ஆண்டு இந்த ரகசிய வீடியோவை எடுத்து உள்ளனர். டி.கே.சிவக்குமாரால் சித்தராமையாவின் நற்பெயர் சீர்கெட்டுவிட்டது. இதுகுறித்து மந்திரி யதீந்திரா சித்தராமையா கூறியது உண்மை. சித்தராமையாவுக்கு எதிராக ரகசிய வீடியோ எடுத்தது ஏன்?. அந்த பெண் நிர்வாகி சித்தராமையாவின் தீவிர மான ஆதரவாளர். அவர்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் எங்கள் கட்சியினருக்கு இந்த அரசு நோட்டீஸ் கொடுக்கிறது.

12 ரகசிய வீடியோக்கள் இருக்கிறது

அந்த காங்கிரஸ் பெண் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்களா?. ஆதாரங்கள் வேண்டும் என்று போலீஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறுகிறார். இதை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும். டி.கே.சிவக்குமாருடன் இருப்ப வர்களின் போன் அழைப்புகளை ஆய்வு செய்தால் உண்மைகள் தெரியவரும். இதுபோன்று 12 ரகசிய வீடியோக்கள் உள்ளன.

சித்தராமையாவை சந்திப்பேன்

சித்தராமையாவை சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் சந்திப்பேன். அவர் முன்னாள் முதல்-மந்திரி என்பதால் அவரை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை.வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கேட்டு பிரதமருக்கு இந்த அரசு கடிதம் எழுதியுள்ளது. கடிதம் எழுதிவிட்டு அமர்ந்து கொண்டால் போதுமா?.

டி.கே.சிவக்குமாரை ஏற்க முடியாது

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்குவதாக இந்த அரசு அறிவித்தது. அந்த நிதி உதவியை இதுவரை வழங்க வில்லை.டி.கே.சிவக்குமாரை முதல்-மந்திரியாக ஏற்க முடியாது. கனகபுராவின் வரலாறு மற்றும் பின்னணி குறித்து டி.கே. சிவகுமார் ஒரு புத்தகம் வைத்திருக்கிறார், அதை அவர் எழுதவில்லை. அந்த புத்தகத்தை படித்த பிறகு, அவரை மாநிலத் தின் முதல்-மந்திரியாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் புத்தகத்தை விட தன்னிடம் அதிகமான கடிதங்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com