காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து

காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சித்துவுக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து
Published on

சண்டிகார்,

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலா மற்றும் கலாசார மந்திரியுமான சித்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டார். இந்தியாபாகிஸ்தான் இடையே கர்தார்பூர் நெடுஞ்சாலை அமைய நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் நடைபெற்ற 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 17 நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவரது தொண்டை பாதிக்கப்பட்டு டாக்டர்கள் அறிவுரையின்படி சிலகாலம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆஷா குமாரி கூறும்போது, சித்து நாடு முழுவதும் தெரிந்த ஒரு நட்சத்திர பேச்சாளர். அவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் ஏராளமான பார்வையாளர்களுடன் தொடர்பில் உள்ளார். அவர் இந்தியா முழுவதும் பிரசாரம் செய்வார் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com