பணமதிப்பு நீக்கம்: வங்கியில் செலுத்தப்பட்ட நோட்டுகளில் கணிசமானவை கறுப்புப்பணமாக இருக்கலாம் - மத்திய அரசு

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டப் பிறகு வங்கியில் செலுத்தப்பட்ட நோட்டுக்களில் கணிசமானவை கறுப்புப்பணமாக இருக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
பணமதிப்பு நீக்கம்: வங்கியில் செலுத்தப்பட்ட நோட்டுகளில் கணிசமானவை கறுப்புப்பணமாக இருக்கலாம் - மத்திய அரசு
Published on

புதுடெல்லி

தனது அறிக்கை ஒன்றில் நிதியமைச்சகமானது வருமானவரித்துறை அதிகாரிகள் ரூ 17,526 கோடி வருமான மறைக்கப்பட்டவையாகும் என்றும், இவற்றில் ரூ. 1003 கோடியை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும் கூறியது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி பணத்தை அதிகம் பயன்படுத்தும் இந்திய பொருளாதாரத்தை மாற்றும் நோக்கமே பணமதிப்பு நீக்கத்திலுள்ளது என்றார். இந்த நடவடிக்கைக்கு பிறகு வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் ஜெட்லி. மத்திய ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் (2016-17) பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ 500, 1000 நோட்டுக்களில் 99 சதவீதம் திரும்ப வந்து விட்டதாக தெரிவித்தார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மக்களை பணத்தை வங்கிகளில் செலுத்த வைத்தது என்ற ஜெட்லி, பணமதிப்பு நீக்கம் அதிகமான வரி செலுத்துவோர், அதிக வரி வருமானம், அதிகமான டிஜிட்டைசேஷன், குறைவான நோட்டுக்களின் புழக்கம் மற்றும் முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரத்துடன் இணைத்தது போன்றவற்றிற்கு வித்திட்டது என்றார்.

கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தது என்று கூறிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை புதிய நோட்டுக்களையும் இதர மதிப்பிலான நோட்டுக்களை அச்சடிக்க ரூ 7,965 கோடி செலவிடப்பட்டதாகவும், இது முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட ரூ. 3,421 கோடி இரு மடங்கு அதிகரித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளதற்கு பதிலளித்த ஜெட்லி தீவிரவாத நடவடிக்கைகளின் வீழ்ச்சி, கள்ள நோட்டுக்களின் ஒழிப்பு, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றை பணமதிப்பு நீக்கம் சாத்தியமாக்கியிருப்பதாக கூறினார்.

மமதா தாக்கு

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பணமதிப்பு நீக்கம் முழுத் தோல்வி என்பதை மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுவதாக கூறினார். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி 1.4 சதவீதம் மட்டுமே கறுப்புப்பணமாக காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த நடவடிக்கையால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, ஏராளமானோர் இறந்ததற்கும் காரணமாக அமைந்தது என்றார். ரிசர்வ் வங்கியின் அறிக்கை பெரிய ஊழல் ஒன்றையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பணமதிப்பு நீக்கத்தின் பின்னணியில் ஏதேனும் மறைவான திட்டம் இருக்குமோ என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com