புற்றுநோய் மருந்துகள் அதிரடி விலை குறைப்பு.... ரூ.26 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் ஆனது

டாப்ருமாப் ஊசிமருந்து தற்போது ரூ.22,031.25-க்கு விற்கப்படுகிறது.
புற்றுநோய் மருந்துகள் அதிரடி விலை குறைப்பு.... ரூ.26 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் ஆனது
Published on: 

புதுடெல்லி,

புற்றுநோய் மருந்துகளை வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் 543 மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதிரடி குறைப்பு

நாட்டில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பில் மருந்துகளின் விலை மிகக்கடுமையாக உள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மருந்துகளை வாங்க முடியாமல் உயிர்களை தொலைத்தவர்களும் உண்டு. இந்தநிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக் கும் விதத்தில் மருந்துகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே, அதிகப்படியான வர்த்தக லாப வரம்புகளை கட் டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை மேலும் மலிவானதாக மாற்றவும். புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் அட்டவணைப்படுத்தப்படாத 137 மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பு சீரமைப்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த 17-ந்தேதி அறிவித்தது. மேலும், உற்பத்தியாளர்கள் தங்களின் திருத்தப்பட்ட பட்டி யலை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

திருத்தப்பட்ட பட்டியல்

இந்த நிலையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் 543 'பிராண்டு'களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை பட்டியலை மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை அடுத்த மாதம் (நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் அமலுக்கு வரும். திருத்தப்பட்ட விலைப்பட்டியலில், நிறுவனங்களால் நேற்று முன்தினம் வரை சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களும் அடங்கி உள்ளன.

திருத்தப்பட்ட பட்டியலின்படி சில புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை விவரம் வருமாறு:-

ரூ.26,000 மருந்து ரூ.6,000

ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனத்தின் புல்பிராக்கா ஊசி மருந்து தற்போது ரூ.26,072.16-க்கு விற்கப்படுகிறது. 9-ந்தேதி முதல் இது ரூ.5,491-க்கு விற்கப்படும். அதே நிறுவனத்தின் டாப்ருமாப் ஊசிமருந்து தற்போது ரூ.22,031.25-க்கு விற்கப்படுகிறது. இனி இது ரூ.5,941-க்கு விற்கப்படும். அபோட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பெவாசிசுமாப் மருந்து தற்போது ரூ.22,031.25-க்கு விற்கப்படுகிறது. இனி இது ரூ.5,930.13-க்கு விற்கப்படும்.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனத்தின் அனஸ்ட்ரோசோல் மருந்து, 10 மாத்திரைகளுக்கு தற்போது ரூ.695.76 ஆக இருக்கிறது. இது இனி ரூ.73-க்கு கிடைக்கும். டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் அசாசிடிடின் ஊசிமருந்து ரூ.6,337-ல் இருந்து ரூ.1,495.04 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. டசாடினிப்பின் பிராண்டான “டசானத் 20" என்ற 60 மாத்திரை தொகுப்பின் விலை ரூ.2,812.50-ல் இருந்து ரூ.1,085.93 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

543 மருந்துகள்

இப்படி 543 மருந்துகளுக்கு திருத்தப்பட்ட விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான திருத்தப்பட்ட விலைகளை உற்பத்தியாளர்கள் சமர்ப்பிக்கும்போது இந்த பட்டியல் புதுப்பிக்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்குறைப்பால் புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு சுமை கணிசமாக குறைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com