

புதுடெல்லி
சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவல்லாவிற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவருக்கு சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்து வழங்கும் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா. இவருக்கு அடையாளம் தெரியாத குழுக்களிடமிருந்து கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மிரட்டல்கள் வருகிறது. அதனால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரகாஷ் குமார் சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்குக் கடிதம் எழுதினார். இந்த கடிதம்கடந்த ஏப்ரல் 16ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள மாவட்டங்களிருந்து சீரம் நிறுவனத்திற்கு 34 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்குவதற்கான ஆர்டர்களும், தனியார் மருத்துவமனையிலிருந்து 2 கோடி டோஸ்கள் வழங்குவதற்கான ஆர்டர்களும் சீரம் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.