போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம்

போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம் நடத்தினார்.
போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம்
Published on

ஜான்சி,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி நகரை சேர்ந்த சீக்கிய பெண் புனீத் சிங். அவருடைய தந்தை ஜோகிந்தர் சிங் (வயது 80). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்துபோனார்.

தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவரை சொத்துக்காக தங்களது வீட்டு அருகே வசித்து வரும் இருவர் மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டனர் என்றும் போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார். புகாரின் பேரில் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த புனீத் சிங், தனது தலையை மொட்டையடித்து கொண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.

மேலும் போலீசாரின் செயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com