”குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை” திட்டத்தை தொடங்கி வைத்த சிக்கிம் முதல்-மந்திரி

சிக்கிம் மாநிலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அம்மாநில முதல்-மந்திரி பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார்.
”குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை” திட்டத்தை தொடங்கி வைத்த சிக்கிம் முதல்-மந்திரி
Published on

சிக்கிம்,

சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது. நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.

அம்மாநில முதல்-மந்திரியாக பவன் சாம்லிங் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு சிக்கிம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்னும் திட்டத்தை அறிவித்தார். அறிவித்ததைப் போலவே அதை தற்போது செயல்படுத்தியுள்ளார்.

காங்டாக்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை அவர் வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருக்கும் அவர்களின் தகுதிக்கேற்றபடி அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து புதிய வாக்குறுதிகளை சாம்லிங் அளித்துள்ளார். அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யுபிஐ (UBI) எனப்படும் இலவச அடிப்படை மாத ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பவன் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, அம்மாநிலத்தில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவர் முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com