

ஐதராபாத்,
சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி கருத்து தெரிவிக்கும்படி முன்னாள் தேர்தல் ஆணைய தலைவர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், இது சாத்தியமா? அரசியலமைப்பு திருத்தப்படாமல் இது நடைபெற சாத்தியமில்லை என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நிர்வாக நோக்கங்கள் மற்றும் நிதியை சேமிக்கும் வகையில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது என்பது சவுகரியம் ஆக இருக்கும் என கூறியுள்ளார்.
இதற்கு மாநில தேர்தல் சட்டத்தில் திருத்தம் தேவை. ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களை நடத்துவது விரும்பத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், அவை எல்லாவற்றையும் விட பழிவாங்கும் அரசியல், வன்முறை நிறைந்த விளம்பரம், பிரசாரம் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் ஆகியவை குறையும் என கூறிய அவர், 2019ல் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என கூறியுள்ளார். ஏனெனில் சில மாநிலங்களில் 5 வருட ஆட்சிக்கான தேர்தல் கடந்த வருடம் நடந்து முடிந்துள்ளது. இந்த வருடமும் வேறு சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வருகிற 2024ம் ஆண்டில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
#CEC #Assemblyelections