2015-ம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாடுகளில் இருந்து 28 சிலைகள் மீட்பு

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #IdolSmuggling
2015-ம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாடுகளில் இருந்து 28 சிலைகள் மீட்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 28 சிலைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 21 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 சிலைகளும், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு சிலையும் மீட்கப்பட்டுள்ளது.

இவற்றில் தமிழகத்தில் உள்ள கேவில்களில் இருந்து கடத்தப்பட்ட விநாயகர், மாணிக்கவாசகர், உமா பரமேஸ்வரி, சேழர் காலத்து ஸ்ரீதேவி சிலைகளும், பார்வதி, துர்கா உள்ளிட்ட 9 சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com