24 ந்தேதி காஷ்மீர் அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

24 ந்தேதி காஷ்மீர் அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
24 ந்தேதி காஷ்மீர் அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த, ஆகஸ்ட் 2019 சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதுடன், சட்டசபை தேர்தலை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வருகிற 24 ந்தேதி அன்று, காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அம்மாநில மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது அடுத்த வாரம் கூட்டம் நடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறையான அழைப்பிற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகமூபா முப்தி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை இரண்டு உயர்மட்டக் கூட்டங்களை நடத்தினார். பாதுகாப்பு விரிவாக்கம், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விவசாயத் தொழிலை அமைத்தல், மற்றும் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை அவர் முடுக்கிவிட்டார்.

இரண்டு கூட்டங்களிலும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் ஐபி, ரா, சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் விரிவான வளர்ச்சி என்பது மோடி அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும். ஜம்மு-காஷ்மீரில் அபிவிருத்திப் பணிகளை மறுஆய்வு செய்வதற்காக ஒரு கூட்டத்தை நடத்தியதுடன், வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்ப்ட்டு உள்ளதாக அமித் ஷா ஒரு டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தல்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்த புதிய தகவல்களைக் கோரி கடந்த 20 செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கும் டிலிமிட்டேஷன் கமிஷன் கடிதம் எழுதி உள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com