டெல்லி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

டெல்லி விமான நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
Published on

புதுடெல்லி,

சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த எஸ்.கியூ 406 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 228 பயணிகளுடன் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ 380- 800 ரக விமானம், சக்கரத்தின் முகப்பு பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு 8.20 மணியளவில், ஓடுபாதை 28-ல் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் பின்னர், வேறு ஓடுபாதைக்கு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது என்றும் டெல்லி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com