எஸ்ஐஆர் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: காங்கிரஸ்

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை 13 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் வாக்குரிமையைப் பாதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ்
Published on: 

புதுடெல்லி:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆர்.) உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல்களைத் தேடக்கூடிய வடிவில் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி இது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது; பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் . தேர்தல் ஆணையம் மற்றும் அதன் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட வேண்டும். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை 13 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் வாக்குரிமையைப் பாதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com