ஆந்திராவில் முன்பகையால் விபரீதம்: குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை

முன்பகை காரணமாகவே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆந்திராவில் முன்பகையால் விபரீதம்: குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை
Published on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஜூட்டாடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ் என்பவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். ராமாராவ் வீட்டருகே உள்ள அப்புல்ராவ் என்பவர் நேற்று அதிகாலை நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து ராமாராவின் மனைவி உஷா, 2 மாத குழந்தை நிஷா, 2 வயது மகன் உதய் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ராமாராவ் வீட்டில் ரத்த வெள்ளத்தில் 6 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், கொலையாளி அப்புல்ராவை கைது செய்து இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாகவே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பச்சிளம் குழந்தை எனவும் பாராமல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com