தெலுங்கானா: லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா: லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த டிரைவர் உள்பட 10 பேர் இன்று அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com