

ஸ்ரீநகர்,
உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த பனி படர்ந்த மலைப்பகுதி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.
சியாச்சின் ராணுவ வீரர்கள் முகாம் அருகே இன்று திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், இதில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 8 வீரர்கள் வரை சிக்கியிருக்கலாம் என்று ராணுவ வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்புக்குழுக்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.