ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை

ஜார்கண்ட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. #suicide
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை
Published on

ஜார்கண்ட்,

ஜார்கண்ட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், குடும்பத்தில் ஏற்பட்ட அதிக கடன் சுமை காரணமாக அனைவரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகுந்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தடவியல் நிபுணர்களின் உதவியை நாடி உள்ளோம். தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆறாவது நபரான சிறுவனை மாடியிலிருந்து தள்ளியதாக தெரிய வந்துள்ளது என கூறினார்.

இது ஜீலை மாதத்தில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய சம்பவமாகும். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com