ஒடிசா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 6 பேர் காயம்

ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட A-1 விமானம் ஒன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ரூர்கேலாவுக்கு முன்னதாக 10 கிலோ மீட்டர் தொலைவில் ஜல்டா அருகே சென்று கொண்டிருந்தபோது விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






