மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவு

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவானது.
மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவு
Published on

இம்பால்,

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.4 ஆக பதிவானது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் லேசாக வீடுகள் குலுங்கின.

இதனால், அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com