கோப்புப் படம் PTI
கோப்புப் படம் PTI

இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது சின்னச்சின்ன ஏற்ற இறக்கங்களுடன் கொரோனா தொற்று உள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 1,033 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது கொஞ்சம் அதிகரித்து 1,109 ஆக பதிவானது. இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து 1,150 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,109-ஐ விட சற்று அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 34 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,194 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 14,79,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 185.55 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com