சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 3,611 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,611 ஆக குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,611 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,60,678-லிருந்து 4,49,64,289 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,606-லிருந்து 5,31,642 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,587 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,43,99,415 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 36,244-லிருந்து 33,232 ஆக குறைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com