சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்து மீது காலணி வீச்சு

விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்து மீது காலணி வீசப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்து மீது காலணி வீச்சு
Published on

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள அமராவதி நகரில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனை பார்வையிடுவதற்காக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு பேருந்து ஒன்றில் சென்றுள்ளார்.

இந்நிலையில், வேங்கடபள்ளம் அருகே பேருந்து சென்றபொழுது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு விவசாயிகள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்துக்கு வழிவிடாமல் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

பின்னர் போலீசாரின் பாதுகாப்புடன் பேருந்து அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் பேருந்து சென்றவுடன் அதனை நோக்கி காலணி ஒன்றை தூக்கி வீசியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com