சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன-ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் வெறும் வெற்று முழக்கங்களாக மாறிவிட்டன என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
Published on

ஜெய்ப்பூர்,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவ தாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெய்பூரில் உள்ள பஸ் மற் றும் லாரி பாடி பில்டிங் பட்டறைக்குச் சென்ற வீடியோவை வெளியிட்டுள் ளார். இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் வெறும் வெற்று முழக்கங்களாக மாறிவிட்டன.

உலகத்தரம் வாய்ந்த கைவினைத்திறனைக் கொண்ட இந்திய தொழிலாளர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக, மத்திய அரசு பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டால், பாரம்பரியத் திறன்கள் அழிந்து, லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com