பெங்களூருவில் நாய் திருட்டு போனதால் கண்ணீர் விட்டு கதறிய சின்னத்திரை நடிகை

பெங்களூருவில் நாய் திருட்டு போனதால் சின்னத்திரை நடிகை கண்ணீர் விட்டு கதறினார்.
பெங்களூருவில் நாய் திருட்டு போனதால் கண்ணீர் விட்டு கதறிய சின்னத்திரை நடிகை
Published on

பெங்களூரு:

பெங்களூரு நாகரபாவி பகுதியில் வசித்து வருபவர் நிருஷா. இவர் கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். இந்த நிலையில் நிருஷா ஒரு பெண் நாயை வளர்த்தார். அந்த நாய்க்கு டிம்பிள் என்றும் பெயர் சூட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு நிருஷாவின் வீட்டின் முன்பு நாய் நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் சேர்ந்து அந்த நாயை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இந்த நிலையில் நாய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிருஷா வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் நாயை, இளம்பெண் மற்றும் வாலிபர் திருடி செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் தனது நாயின் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு உள்ள நிருஷா நாயை திருடி சென்றவர்கள் நாயை திரும்ப தந்து விடும்படி கோரிக்கை விடுத்து உள்ளார்.

மேலும் நிருபர்களிடம் அவர் கூறும்போது, 'நான் வளர்த்து வந்த நாய்க்கு 8 வயது ஆகிறது. அதற்கு உடல்நல பிரச்சினை உள்ளது. சரியான நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும். என்னையும், எனது அம்மாவையும் பிரிந்து நாய் ஒரு நிமிடம் கூட இருக்காது. நாய் காணாமல் போனதில் இருந்து நானும், எனது அம்மாவும் சாப்பிடாமல் இருக்கிறோம். தயவு செய்து நாயை திருடி சென்றவர்கள் நாயை திரும்ப தந்து விடுங்கள்' என்று கண்ணீர்மல்க கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com