சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறையை மறுத்தது ஏன்? மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி விளக்கம்

பணியிடத்தில் பெண்கள் பாகுபாட்டையும் துன்புறுத்தலையும் எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறையை மறுத்தது ஏன்? மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி விளக்கம்
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கடந்த 13-ம் தேதி, பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தெடர்பாக மனேஜ் குமார் ஜா எம்.பி கேள்வி எழுப்பினார். இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த பதிலில், "மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல, இதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தேவையில்லை" என கூறியிருந்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெண்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்மிருதி இரானியின் பதிலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை  தேவை இல்லை எனக் கூறியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசினேன். ஏனென்றால் பணியிடத்தில் பெண்கள் பாகுபாட்டையும் துன்புறுத்தலையும் எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. ஆனால் இதற்கான கேள்வியானது அதிர்ச்சியை தூண்டும் வகையிலும், கவனத்தை ஈர்ப்பதை நேக்கமாகவும் கெண்டிருந்தது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com