உள்ளாடைக்குள் மறைத்து வைத்து பணம், தங்கம் கடத்தல் - 3 பேர் கைது

கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கம், பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற 3 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில், அவர்கள் அணிந்திருந்த பிரத்யேக உள்ளாடைகளுக்குள் இருந்து கடத்தி வந்த ரூ.70 லட்சம் ரொக்கப் பணம், 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சாகர், மணிகண்டன் மற்றும் சந்தீப் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர்? எங்கு இருந்து எங்கு கொண்டு செல்ல முயன்றார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






