துபாயில் இருந்து ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகள் இந்தியாவுக்கு கடத்தல்

துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
துபாயில் இருந்து ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகள் இந்தியாவுக்கு கடத்தல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து அவ்வப்போது கோகைன், அபின் மற்றும் ஹெராயின் போன்ற போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வந்தனர்.

துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தல் பொருட்கள் வருகின்றன என அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. இதனை தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இதில், கன்டெய்னர் ஒன்றில் சரக்கோடு சரக்காக மறைத்து வைத்து சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தப்பட்டு உள்ளன.

அதனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில், ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவை, சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் குடாங் கரம் ரக சிகரெட்டுகள் ஆகும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com