அலுவலக மேஜையில் நாக பாம்பு... என்ன மனு கொடுக்க வந்ததோ? அதிர்ச்சியில் அதிகாரி

ராஜஸ்தானில் பரபரப்பு நிறைந்த ரெயில்வே நிலையத்தில், அலுவலக மேஜையில் நாக பாம்பு ஒன்று வந்து நின்ற அதிர்ச்சியில் அதிகாரி வாயடைத்து போனார்.
அலுவலக மேஜையில் நாக பாம்பு... என்ன மனு கொடுக்க வந்ததோ? அதிர்ச்சியில் அதிகாரி
Published on

கோட்டா,

ராஜஸ்தானில் கோட்டா மண்டலத்திற்கு உட்பட்ட ராவ்தா சாலையில் ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. நாள்தோறும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த ரெயில் நிலையத்திற்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், ரெயில்வே அதிகாரி பணியாற்றும் மேஜை மீது 6 அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று வந்து நின்றது. அது அதிகாரியிடம் என்ன மனு கொடுக்க வந்தது என தெரியவில்லை.

ஆனால், அதிர்ச்சியில் அந்த அதிகாரி சில அடி தொலைவில் மற்றொரு மேஜை மீது ஏறி அமர்ந்து கொண்டார்.

இதனை பத்திரிகையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். எனினும், இதனால் ரெயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

ஆனால், டுவிட்டரில் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். எப்படி ரெயில் சேவை பாதிக்கப்படவில்லை? அந்த நபர் எப்படி அமைதியாக இருக்கிறார்? என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

புகைப்படம் பார்த்து நடுங்கி விட்டேன். அந்த அதிகாரி எப்படி அங்கே அமர்ந்திருக்கிறார் என உறுதியாக எனக்கு தெரியவில்லை என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த ஆண்டு குரங்கு ஒன்று வி.ஐ.பி. பகுதியில் நுழைந்து பழச்சாற்றை குடித்து சென்ற வீடியோ வைரலாகி இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com