இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது - சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது - சுகாதார அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு போட திட்டமிடப்பட்டு உள்ளது.தடுப்பூசி திட்டம் தொடங்கிய 12-வது நாளான நேற்று வரை 23 லட்சத்து 28 ஆயிரத்து 779 பயனாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதில் நேற்று மட்டுமே 2,99,299 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் தீவிர பக்க விளைவு அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேநேரம் 16 பேர் இதுவரை சிறிய பக்க விளைவுக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது மொத்த எண்ணிக்கையில் 0.0007 சதவீதம் ஆகும். இதைப்போல தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் அதில் யாருக்கும் தடுப்பூசியால் மரணம் விளைந்ததாக தகவல் இல்லை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இவ்வாறு 12 நாட்களாக இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com