போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பெண் கைது

போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு பெண் கைது
Published on

பெங்களூரு: பெங்களூரு கம்மனஹள்ளி மெயின் ரோட்டில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வெளிநாட்டு பண்ணை பானசாவடி போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் பார்த்தனர். அப்போது அந்த பையில் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த பாத்திமா ஒமரி (வயது 30) என்பது தெரியவந்தது. சுற்றுலா விசாவில் பெங்களூருவுக்கு வந்த பாத்திமா விசா காலம் முடிந்தும் சொந்த ஊருக்கு செல்லாமல் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருட்கள் விற்றதும் தெரியவந்தது. கைதான பாத்திமாவிடம் இருந்து 13 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com