காஷ்மீர்: கண்ணிவெடி வெடித்து ராணுவ வீரர் படுகாயம்

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர்: கண்ணிவெடி வெடித்து ராணுவ வீரர் படுகாயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குல்மர்க் செக்டர் பகுதியில் சர்வதேச எல்லை அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த ராணுவ வீரர் படுகாயமடைந்தார். உடனடியாக ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com